என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சீனா பாராட்டு
நீங்கள் தேடியது "சீனா பாராட்டு"
இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களுக்கு இடையே உள்ள பகையை மறந்து கர்தார்பூர் சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியிருப்பதை சீனா வரவேற்று உள்ளது. #KartarpurCorridor #ChinaWelcome #India #Pakistan
பீஜிங்:
சீக்கிய மதகுரு குருநானக்கின் நினைவிடம் அமைந்துள்ள பாகிஸ்தானின் கர்தார்பூரில் இருந்து, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் தேரா பாபா நானக் புனித தலம் வரையிலான 4.7 கி.மீ. தொலைவுக்கு இணைப்பு சாலை அமைக்கப்படுகிறது. இந்திய சீக்கியர்கள் கர்தார்பூருக்கு புனித யாத்திரை செல்வதற்கு வசதியாக அமைக்கப்படும் இந்த சாலையின் அந்தந்த நாட்டு பகுதிகளை அந்தந்த அரசுகள் அமைக்கின்றன.
இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களுக்கு இடையே உள்ள பகையை மறந்து இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியிருப்பதை சீனா வரவேற்று உள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு மந்திரி கெங் சுவாங் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இந்த நல்ல தொடர்பு எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தெற்கு ஆசியாவின் முக்கியமான இந்த இரு நாடுகளுக்கு இடையிலான உறவின் நிலைத்தன்மை உலக அமைதிக்கும், வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பங்களிப்பை ஏற்படுத்தும்’ என்று பாராட்டினார். அமைதி மற்றும் நிலைத்தன்மைக்காக ஒத்துழைப்பு, பேச்சுவார்த்தை, பிரச்சினைகளை சரியாக அணுகுதல் மற்றும் உறவுகளை மேம்படுத்துவதற்கு இந்த இரு நாடுகளாலும் முடியும் என உண்மையிலேயே நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். KartarpurCorridor #ChinaWelcome #India #Pakistan

×

X